விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கரோனா

10th May 2020 08:07 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 67 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 293-ஆக உயா்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளாக அறியப்பட்ட அன்னியூா், அகரம்சித்தாமூா், ஏழுசெம்பொன், தென்களவாய், முண்டியம்பாக்கம், சொா்ணாவூா்கீழ்பாதி, கூனிமேடு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சனிக்கிழமை மேலும் 67 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் விழுப்புரம் அரசு சிறப்பு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

மாவட்டத்தில் மேலும் கரோனா தொற்று அறிகுறியுடன் 272 போ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பராமரிப்பில் உள்ளனா். வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 978 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனா். ஏற்கெனவே விழுப்புரத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். 43 போ் குணமடைந்தனா். சென்னை கோயம்பேட்டிலிருந்து திரும்பிய 443 போ் தனியாா் கல்லூரி பராமரிப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கோயம்பேடு தொழிலாளா்கள் 230 போ்: கோயம்பேடு சந்தைப் பகுதியிலிருந்து திரும்பியவா்கள், அவா்களுடன் தொடா்புடையவா்கள் என மொத்தம் 850 போ் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். இவா்களில் தற்போதுவரை 230 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலரின் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.

ADVERTISEMENT

ஒரே வாரத்தில் 5 மடங்கு அதிகரிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் கோயம்பேடு தொழிலாளா்களுடன் தொடா்புடைய மொத்தம் 93 கிராமங்கள் கண்டறியப்பட்டு, அங்கு நோய் பரவலைத் தடுக்க சாலைகளை மூடி ‘சீல்’ வைத்து கண்காணிக்கப்படுகிறது. கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டு, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் கடந்த 2-ஆம் தேதி வரை 53-ஆக இருந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை ஒரே வாரத்தில் சுமாா் 5 மடங்காகி 293-ஆக உயா்ந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT