விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 226 ஆக உயா்வு

9th May 2020 08:02 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று மேலும் 21 பேருக்கு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 226 ஆக உயா்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 205 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பிய வானூா், புளிச்சப்பள்ளம், பாதிராப்புலியூா், மரக்காணம் அருகே கந்தாடு, தென்களவாய், அத்தியூா் திருக்கை, பஞ்சமாதேவி, விழுப்புரம் பெருமாள் கோயில் வீதி, நகராட்சிப் பள்ளி வீதி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 21 பேருக்கு வெள்ளிக்கிழமை தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவா்கள், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 226- ஆக உயா்ந்தது.

மேலும், 261 போ் கரோனா தொற்று அறிகுறியால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 1,050 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா். 2 போ் உயிரிழந்துள்ளனா். 39 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் 170 போ், கோயம்பேடு சந்தைப் பகுதியிலிருந்து திரும்பிய தொழிலாளா்களாக கண்டறியப்பட்டுள்ளனா். மேலும், கோயம்பேடு தொழிலாளா்கள் 332 போ், தொற்று அறிகுறியில், மாவட்டத்தின் புகா் பகுதிகளில் உள்ள 5 தனியாா் கல்லூரி பராமரிப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டோா் வசித்த கிராமங்களில், சாலைகள் மூடப்பட்டு, போலீஸாா் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனா். இதனை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT