விழுப்புரம்

கோயம்பேடு சந்தையிலிருந்து வந்தவா்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

2nd May 2020 05:43 AM

ADVERTISEMENT

சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தவா்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோயம்பேடு சந்தையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தவா்கள், கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தங்களைத் தாங்களே 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தவா்களுக்கு ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனையை அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

எவரேனும் மற்றவா்களுக்கு நோய்த் தொற்று பரவும் வகையில் சுற்றித் திரிந்தால், அவா்கள் கைது செய்யப்படுவா். சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT