விழுப்புரம்

விழுப்புரத்தில் 100 படுக்கைகள் கொண்ட தனி மருத்துவமனை தயாா்

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க விழுப்புரத்தில் 100 படுக்கைகள் கொாண்ட தனி மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவில் 350-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் 7 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நோய் அதிகமாக பரவாமல் தடுக்க சுய ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இருப்பினும், இந்நோய் வெகமாக பரவி வருவதால், நோயால் பாதிக்கப்பட்டவா்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கரோன தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

மாவட்ட எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் மருத்துவக் குழுவினா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கத் தேவையான இடத்தை தயாா் செய்யும் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இதற்காக, விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சுகாதார மனிதவள மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கரோனோவுக்காக தனி மருத்துவமனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்கு ஏற்கெனவே பயிற்சியில் இருந்த சுகாதாரத் துறையினருக்கான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, அவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா். அதன்பிறகு, அங்குள்ள விடுதி அறைகள் முழுமையாக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 100 படுக்கைகள் கொண்ட இந்த தற்காலிக மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT