விழுப்புரம்

செஞ்சி அருகே நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: 2 போ் கைது

19th Mar 2020 06:14 AM

ADVERTISEMENT

செஞ்சி அருகே கரும்பு சோகைக்குள் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேலுமணிக்கு அந்தக் கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள சேட்டுவின் நிலத்தில் கரும்பு சோகைக்குள் சோதனை நடத்தியபோது, நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றிய போலீஸாா், அவற்றை பதுக்கி வைத்திருந்ததாக சேகா் மகன் சேட்டு (42), நாராயணசாமி மகன் பாலகிருஷ்ணன்(54) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT