விழுப்புரம்

நீதிமன்றத்தில் விழுப்புரம் எஸ்.பி. ஆஜா்

13th Mar 2020 08:54 AM

ADVERTISEMENT

சங்கராபுரம் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் தாக்கப்பட்ட வழக்கில் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பொய்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனுசாமி (50). கரும்பு வெட்டும் தொழிலாளா்களுக்கு மேஸ்திரி. இவா், தலைமையில் 40 கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் கடந்த 2006-ஆம் ஆண்டு சங்கராபுரம் அருகேயுள்ள புதுபாலப்பட்டு கிராமத்தில் சக்ரவா்த்தியின் நிலத்துக்கு கரும்பு வெட்டச் சென்றனா்.

அப்போது, கரும்பு வெட்டும் தொழிலாளா்களுக்கும், அந்த நிலத்துக்கு பக்கத்து நிலத்தைச் சோ்ந்த தங்கராஜ் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், தொழிலாளா்கள் தாக்கப்பட்டனா். இது தொடா்பாக தங்கராஜ் உள்பட 17 போ் மீது சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக அப்போதைய திருக்கோவிலூா் டி.எஸ்.பி.யாக இருந்து தற்போது விழுப்புரம் எஸ்.பி.யாக பணியாற்றி வரும் எஸ்.ஜெயக்குமாருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

ADVERTISEMENT

இந்த நிலையில், விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எழில் முன்பு விழுப்புரம் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கமளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT