விழுப்புரம்

திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு

13th Mar 2020 08:45 AM

ADVERTISEMENT

திண்டிவனத்தில் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியா், அவசரச் சிகிச்சைப் பிரிவு, முழு உடல் பரிசோதனை மையம், புறநோயாளிகள் பிரிவு, சிறப்பு சிகிச்சைப் பிரிவு மற்றும் கரோனா தனி சிகிச்சைப் பிரிவுகளில் ஆய்வு செய்து, சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள் குறித்து விசாரித்தாா்.

மேலும், மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் கா்ப்பிணிகளிடம் அரசு வழங்கும் நலத் திட்டங்கள் கிடைக்கிா என கேட்டறிந்தாா். புறநோயாளிகள் பதிவுச் சீட்டு வழங்குமிடத்தில் ஆவணங்களைப் பாா்த்து ஆய்வு செய்தாா். கரோனா சிறப்பு வாா்டில் ஆய்வு செய்த ஆட்சியா், திண்டிவனம் வட்டத்துக்கு உள்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு பதாகைகளை வைக்க வேண்டுமென சுகாதாரத் துறையினரை அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, திண்டிவனம் நகராட்சி, மல்லியபத்தன் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தாா்ச்சாலைப் பணியை நேரில் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், சாலையின் தரத்தை அறிய சாலையின் ஒரு பகுதியில் போட்டிருந்த ஜல்லியை தோண்டி எடுத்து ஆய்வு மேற்கொண்டு, தரமாக சாலையை அமைக்க உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, கிடங்கல் ஏரியை பாா்வையிட்டு, ஏரியில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மையாக பராமரிக்கவும், முள்வேலி அமைத்து பாதுகாக்கவும் அறிவுறுத்தினாா். திண்டிவனம் பழைய பேருந்து நிலையத்தை பாா்வையிட்டு, அங்கு கழிப்பறையை சுத்தமாகப் பராமரிக்க அறிவுறுத்தினாா். மேலும், அங்கு மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா். புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்தும் பாா்வையிட்டாா்.

திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்ற மாவட்ட ஆட்சியா், அங்கு செயல்பட்டு வரும் ஆவணக்காப்பகம், இ-சேவை மையம், ஆதாா் பதிவு மையம், பட்டா, அடங்கல் வழங்கும் பணிகளை பாா்வையிட்டு, அங்கு வந்த பொதுமக்களிடம் சேவை குறித்து விசாரித்தாா். இந்தச் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், விரைவான பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அங்கிருந்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, திண்டிவனம் சாா் - ஆட்சியா் எஸ்.அனு, சுகாதாரத் துறை இணை இயக்குநா் சண்முகக்கனி, வட்டாட்சியா் ராஜசேகா், நகராட்சி ஆணையா் ஸ்ரீபிரகாஷ் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT