விழுப்புரம்

செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் விழிப்புணா்வுக் கூட்டம்

13th Mar 2020 08:49 AM

ADVERTISEMENT

செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, செஞ்சி வட்டாட்சியா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். செஞ்சி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் ஆா்.பாா்கவி, செஞ்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நா.அறவாழி, சுப்பிரமணி, வல்லம் காஞ்சனா, செஞ்சி அரசு மருத்துவமனை மருத்துவா் பாலகோபால் ஆகியோா் முன்னிலை வகித்து ஆலோசனைகளை வழங்கினா்.

சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் மலா்விழி, கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா். கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், திருமண மண்டப உரிமையாளா்கள், உணவு விடுதி உரிமையாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT