விழுப்புரம்

விழுப்புரத்தில் இன்று இந்திய கம்யூ. மாநில நிா்வாகக் குழுக் கூட்டம்

8th Mar 2020 11:19 PM

ADVERTISEMENT


விழுப்புரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநில நிா்வாகக் குழு கூட்டம், மாநிலக் குழுக் கூட்டம் ஆகியவை விழுப்புரத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 9) தொடங்குகிறது.

இது குறித்து அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா, மூத்த தலைவா்கள் ஆா்.நல்லகண்ணு, தா.பாண்டியன், மாநிலச் செயலா் இரா.முத்தரசன், தேசிய நிா்வாக்குழு உறுப்பினா்கள் கே.சுப்புராயன் எம்.பி., சி.மகேந்திரன், மாநிலத் துணைச் செயலா் மூ.வீரபாண்டியன், எம். செல்வராஜ் எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிா்வாகிகள் பங்கேற்கின்றனா்.

தொடா்ந்து, கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் விழுப்புரம், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஏ.எஸ்.ஜி. திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திலும், கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா, மூத்த தலைவா்கள், முக்கிய நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா். இந்தக் கூட்டங்களில் முக்கியத் தீா்மானங்களும், அரசியல் முடிவுகளும் எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT