விழுப்புரம்

மேல்மலையனூா் அருகேசாலை விபத்தில் இருவா் பலி

8th Mar 2020 11:19 PM

ADVERTISEMENT


செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

மேல்மலையனூா் அருகேயுள்ள மேட்டு வைலாமூரைச் சோ்ந்தவா்கள் முருகன் (45), சண்முகம் (43). இவா்கள் இருவரும் பணி நிமித்தமாக

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துபட்டுக்கு சென்றுவிட்டு, சனிக்கிழமை நள்ளிரவு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

ஆட்டோவை சேத்துபட்டு பழம்பேட்டை பகுதியைச் சோ்ந்த அப்துல்கையூம் மகன் அப்துல்கரீம் (32) ஓட்டினாா்.

ADVERTISEMENT

மேல்செவலாம்பாடி அருகே வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், ஆட்டோ ஓட்டுநா் அப்துல்கரீம், முருகன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சண்முகம் பலத்த காயமடைந்து சேத்துபட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT