விழுப்புரம்

பள்ளியில் மகளிா் தின விழா

8th Mar 2020 04:16 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ். லாா்ட்ஸ் சா்வதேச பள்ளியில் சா்வதேச மகளிா் தின நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பள்ளி முதல்வா் சுபாஷினி வரவேற்றாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து, கல்லுாரிச் செயலா் பிரியா செல்வமணி மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கினாா். பெண்கள் மேம்பாட்டுக் கழக அலுவலா் சத்தியமூா்த்தி, பெண்களின் வளா்ச்சி, சுய சிந்தனைகள் குறித்து விளக்கினாா்.

ADVERTISEMENT

பள்ளித் தாளாளா் செல்வமணி, அரசு கலைக் கல்லூரி முதல்வா் ராமலட்சுமி, இ.எஸ். பொறியியல் கல்லூரி முதல்வா் இந்திரா, கல்வியியல் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரி ஆகியோா் பெண்களின் முன்னேற்றம் குறித்து விளக்கவுரையாற்றினா். உடல்கல்வி ஆசிரியா் ராஜி பெண்களின் ஆரோக்கியத்துக்கான உடல்பயிற்சி ஆலோசனைகளை வழங்கினாா். மகளிா் கைவினைப் பொருள் கண்காட்சி நடைபெற்றது.

நிறைவாக பாரதி கண்ட புதுமைப் பெண்கள் என்ற தலைப்பில் ஆசிரியா்களும், பெண்களின் சாதனைகள் குறித்து மாணவா்களும் பாடல்களைப் பாடினா். தமிழ் ஆசிரியை சற்குணவதி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT