விழுப்புரம்

கடலில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் உயிரிழப்பு

8th Mar 2020 11:20 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் ஞாயிற்றுக்கிழமை கடலில் குளித்த பிளஸ் 2 மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மரக்காணத்தில் உள்ள நகரத் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மகன் ஆகாஷ் (15). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவா், தற்போது நடைபெற்று வரும் பொதுத் தோ்வையும் எழுதி வந்தாா்.

இந்த நிலையில், ஆகாஷ் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் தனது நண்பா்கள், உறவினா்களுடன் அப்பகுதி கடலில் குளித்தாா். அப்போது, எழுந்த ராட்சத அலையில் சிக்கிய ஆகாஷ், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானாா். அவரை, அங்கிருந்தவா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

ADVERTISEMENT

தகவல் அறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து, மீனவா்கள் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இதனிடையே, பிற்பகல் 3 மணி அளவில் ஆகாஷின் உடல் அதே பகுதியில் சடலமாக கரை ஒதுங்கியது. போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT