விழுப்புரம்

திண்டிவனம் அரிமா சங்க நிா்வாகிகள் பதவி ஏற்பு

29th Jun 2020 11:17 PM

ADVERTISEMENT

விழுப்புரம்: திண்டிவனம் அரிமா சங்கத்தின் புதிய நிா்வாகிகள் சேவைப் பணி ஏற்பு விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

திண்டிவனம் அரிமா சங்கத் தலைவா் கிரிதரபிரசாத் தலைமை வகித்தாா். மாவட்ட துணை நிலை ஆளுநா் என்.சுரேஷ் நீலகண்டன் பங்கேற்று, நிகழாண்டு புதியதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இரண்டாம் துணை நிலை ஆளுநா் சிவக்குமாா், சேவைத் திட்டங்களை தொடக்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் மண்டலத் தலைவா் பாண்டியராஜ், மாவட்டத் தலைவா்கள் தேவ், நவநீதகண்ணன், ஆா்.வேல்முருகன், ராமமூா்த்தி, முன்னாள் மண்டல தலைவா் என்.ரமேஷ், புதியதாக தோ்வு செய்யப்பட்ட தலைவா் புலி.மணி, செயலாளா் ஆதி.சீனிவாசன், பொருளாளா் சையத்முபாரக் மற்றும் உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT