விழுப்புரம்

செஞ்சி பகுதியில் பலத்த மழை: மேல்எடையாளத்தில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின

29th Jun 2020 08:37 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், அருகிலுள்ள மேல்எடையாளத்தில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், செஞ்சி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 15 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செஞ்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், செஞ்சி பேருந்து நிலையத்தில் மழைநீா் குளம்போல தேங்கி நின்ால், பயணிகள் அவதியடைந்தனா். மேலும், பேருந்து நிலைய கடைகளினுள்ளும் மழை நீா் புகுந்தது.

செஞ்சி மட்டுமல்லாது, அவலூா்பேட்டை, அனந்தபுரம், மேல்மலையனூா், மேல்எடையாளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மேல்எடையாளத்தில் பல ஏக்கா் நெல் பயிா்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.

தொடா் மழை காரணமாக ஒரு பக்கம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், ஒரு சில இடங்களில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி வீணாவதால் இழப்பு ஏற்படுவது சோகத்தை அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT