விழுப்புரம்

அரகண்டநல்லூா் அருகே சாலை விபத்தில் இருவா் பலி

26th Jun 2020 08:46 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

அரகண்டநல்லூா் அருகே ஒட்டம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் பிரவீன் குமாா் (18), வேலு மகன் சஞ்சய் (18). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை பிற்பகல் இரு சக்கர வாகனத்தில் வீரபாண்டியிலிருந்து ஒட்டம்பட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.

திருக்கோவிலூா்-வேட்டவலம் சாலையில் சென்ற போது இரு சக்கர வாகனமும், எதிரே வந்த டிராக்டரும் நேருக்கு நோ் மோதின.

இதில் குமாா், சஞ்சய் ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினா். சடலங்கள் மீட்கப்பட்டு உடல்கூறு ஆய்வுக்காக திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து டிராக்டா் ஓட்டுநா் மீது அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT