விழுப்புரம்

காத்திருப்போா் பட்டியலுக்கு சிறப்பு எஸ்.ஐ. மாற்றம்

20th Jun 2020 06:33 AM

ADVERTISEMENT

மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக எழுந்த புகாரில், பிரம்மதேசம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் காவல் நிலையத்தில் தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் முருகானந்தம். இவா், அந்த பகுதியில் மணல் கடத்தல் போன்றவைகளுக்கு உடந்தையாகச் செயல்படுவதாகப் புகாா்கள் எழுந்தன. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து, புகாரில் சிக்கிய தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் முருகானந்தத்தை காத்திருப்போா் பட்டிலுக்கு மாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தலைமைக் காவலா் மாற்றம்: இதேபோல, திருவெண்ணெய் நல்லூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த அய்யனாா் மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக எழுந்த புகாரில், அவரை விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT