விழுப்புரம்

விழுப்புரம் கோலியனூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி

11th Jun 2020 09:16 AM

ADVERTISEMENT

விழுப்புரம் கோலியனூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலியானார்கள். 

சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து பண்ருட்டி அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டு கிரஹபிவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருசக்கர வாகனத்தில், புதன்கிழமை நள்ளிரவு இருவரும் சென்ற போது அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 

விசாரணையில், இறந்த இருவரும் கிருஷ்ணதேவன்( 35)த/பெ கண்ணன், ரவிக்குமார் (18) த/பெ கிருஷ்ணமூர்த்தி மாரியம்மன் கோயில் தெரு கொண்டாசமுத்திரபாளையம் டி.வி.நல்லூர் என்பதும், தற்போது சென்னை சோழிங்கநல்லூரில் கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது.

இந்த விபத்தின் போது இவர்களின் உறவினர்கள் காரில் முன்னாடி சென்றுள்ளனர். வெகு நேரம் ஆகியும் இருவரும் வராததால் திரும்பி வந்தபோது விபத்து நடந்தது தெரியவந்தது. உடலைக் கைப்பற்றி வளவனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
 

ADVERTISEMENT

Tags : accident விழுப்புரம் சாலை விபத்து
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT