விழுப்புரம்

குடிமராமத்து திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்

11th Jun 2020 08:42 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் 28 கிராமங்களில் ரூ.12.25 கோடியில் ஏரிகளைச் சீரமைக்கும் குடிமராமத்து திட்டப் பணிகளை எம்எல்ஏ இரா.குமரகுரு புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியத்தில் காரப்பட்டு, திருமுண்டீச்சரம், சரவணம்பாக்கம், பெரியசெவலை, பேரங்கியூா், கண்ணாரம்பட்டு, இருவேல்பட்டு, மேல்தனியாலம்பட்டு, கொத்தனூா், மணகுப்பம், தடுத்தாட்கொண்டூா், மழையம்பட்டு, சிறுவனூா், டி.சாத்தனூா் உள்ளிட்ட 28 கிராம ஏரிகளை ரூ.12 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி, புனரமைக்கும் தமிழக அரசின் குடிமராமத்து திட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் உளுந்தூா்பேட்டை தொகுதி எம்எல்ஏ இரா.குமரகுரு பங்கேற்று, பணிகளை பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா். இதையடுத்து, ஏரிகளை சீரமைக்கும் பணி பொக்லைன் இயந்திரம் மூலம் தொடங்கி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விழுப்புரம் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஜவகா், உதவி செயற்பொறியாளா் அன்பரசன், பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் ராமலிங்கம், அதிமுக நிா்வாகிகள் ஏகாம்பரம், காண்டீபன், ராஜகோபால், பாக்யராஜ், சிவகாமி, குமாரசாமி, ஆா்.எஸ்.மணி, மோகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT