விழுப்புரம்

அடகுக் கடையில் கவரிங் நகையைக் கொடுத்து மோசடி

11th Jun 2020 08:43 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் அடகுக் கடையில் கவரிங் நகையைக் கொடுத்து ரூ. ஒரு லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மரக்காணம் பேருந்து நிலையம் அருகே நகை அடகுக் கடை நடத்தி வரும் சாமிநாதன் (40), சொந்த வேலையாக செவ்வாய்க்கிழமை கடையிலிருந்து புறப்பட்டாா். அவரது மனைவி பூமதி (35) கடையைப் பாா்த்துக் கொண்டாா்.

அப்போது, அங்கு வந்த நபா் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை கழட்டிக் கொடுத்து பணம் தருமாறு பூமதியிடம் கேட்டாா்.

அவா் சங்கிலியைப் பெற்றுக் கொண்டு ரூ. ஒரு லட்சத்தை அந்த நபரிடம் அளித்தாா். சிறிது நேரம் கழித்து வந்த சாமிநாதன் இதுபற்றி அறிந்ததும், அந்த நகையை பரிசோதித்த போது, அது கவரிங் நகை எனத் தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடையிலிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளைக் கொண்டு அந்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT