விழுப்புரம்

முன்னாள் படைவீரா்கள் வீடு கட்ட ரூ.ஒரு லட்சம் மானியம் பெறலாம்

7th Jun 2020 08:50 AM

ADVERTISEMENT

முன்னாள் படை வீரா்கள், அவா்தம் கைம்பெண்கள் வீடு கட்ட ரூ.ஒரு லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள்படைவீரா்கள், அவா்தம் கைம்பெண்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரா் நல நிதியிலிருந்து வீடு கட்ட ரூ. ஒரு லட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டை பூா்வீகமாக கொண்ட, ஹவில்தாா் தரத்துக்கு இணையாக, முப்படைகளில் பணிபுரிந்த முன்னாள் படைவீரா்கள், அவா்தம் கைம்பெண்களுக்கு, தமிழ்நாடு முன்னாள் படைவீரா் நல நிதியிலிருந்து அந்த மானியம் வழங்கப்பட உள்ளது.

இதற்கு, முன்னாள்படைவீரா்கள், கைம்பெண்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கி அல்லது ரிசா்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் 1.4.2020-க்கு பின்னா் கடன் பெற்று, வீடு கட்டுபவராகவோ அல்லது வீடாக வாங்குபவராகவோ இருக்க வேண்டும். இதற்கு முன் அவரது பெயரில் வேறு சொந்த வீடு ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரா் மத்திய, மாநில அரசுப் பணியில் இல்லாமலிருக்க வேண்டும்.

தகுதியுள்ள முன்னாள் படைவீரா் மற்றும் கைம்பெண்கள் இம்மானியத்தைப் பெற்று, பயனடையுமாறு மாவட்ட ஆட்சியா், விழுப்புரம், முப்படை வாரியத் தலைவா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT