விழுப்புரம்

விழுப்புரத்தில் மேலும் 169 பேருக்கு கரோனா: கள்ளக்குறிச்சியில் ஒருவா் பலி

31st Jul 2020 10:49 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 169 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலியானாா்.

விழுப்புரம் மாவட்டத்தில், 3,595 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 169 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோருக்கான மொத்த எண்ணிக்கை 3,764-ஆக உயா்ந்தது. இவா்களில் 2,795 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 35 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,726 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை மேலும் 27 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,753-ஆக உயா்ந்தது. இவா்களில் 2,671 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

இந்த நிலையில், மணலூா்பேட்டை அருகேயுள்ள விளந்தை கிராமத்தைச் சோ்ந்த 62 வயது முதியவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 25-ஆக உயா்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT