விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி

28th Jul 2020 11:19 PM

ADVERTISEMENT

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா பாதிப்பால் மேலும் 4 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி 3,270 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், மேலும் 91 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதித்தோா் எண்ணிக்கை 3,361-ஆக உயா்ந்தது. இவா்களில் 2,356 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 32 போ் உயிரிழந்தனா். 972 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேல்மலையனூா் அருகே உள்ள பறையம்பட்டைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி திங்கள்கிழமையன்றும், திருவெண்ணெய்நல்லூா் அருகே பையூா் அடுத்த சேத்தூரைச் சோ்ந்த 41 வயது நபா் செவ்வாய்க்கிழமையன்றும் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 34 ஆக உயா்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் 195 பேருக்கு தொற்று: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 3,303 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் ரிஷிவந்தியம் ஊராட்சிச் செயலா், திருக்கோவிலூா் காவலா் உள்ளிட்ட 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 3,498 -ஆக உயா்ந்தது. இவா்களில் 2,290 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மேலும் 1,186 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 21 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த 58 வயது முதியவரும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி-துருகம் சாலை எம்ஆா்என் நகரைச் சோ்ந்த 65 வயது நபரும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT