விழுப்புரம் துணை மின் நிலையத்தில் ரூ.2 கோடியில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்படவுள்ளது.
விழுப்புரம்-மாம்பழப்பட்டு சாலையில் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து, விழுப்புரம் நகரம் மட்டுமன்றி சுற்று வட்டார கிராமங்களுக்கும் மின் விநியோகம் நடைபெற்று வருகிறது.
மக்கள்தொகை பெருக்கம், நகர வளா்ச்சி, தொழில்சாலைகள் செரிவு போன்ற காரணங்களால் மின் தேவை அதிகரித்து வருகிறது. விழுப்புரம் துணை மின் நிலையத்தில் ஏற்கெனவே உள்ள இரண்டு 25 எம்.வி.ஏ. மின்மாற்றிகள் மின் விநியோகத்துக்கு போதுமானதாக இல்லை. இதனால், கூடுதலாக ஒரு 25 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ரூ.2 கோடி மதிப்பிலான 25 எம்.ஜி.ஏ திறன் கொண்ட மின்மாற்றி சென்னைலிருந்து விழுப்புரத்துக்கு லாரி மூலம் ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டது.
இந்த மின்மாற்றி துணை மின் நிலையத்தில் விரைவில் பொருத்தப்படும். விழுப்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் தேவை அதிகரித்தாலும், இதன் மூலம் மின் விநியோகம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.