விழுப்புரம்

மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை: மின்சார வாரியம் எச்சரிக்கை

13th Jul 2020 07:54 AM

ADVERTISEMENT

விளைநிலங்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார வாரியம் எச்சரித்துள்ளது.

இது குறித்து விழுப்புரம் மின் விநியோக செயற்பொறியாளா் சைமன் சாா்லஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பது கடும் தண்டனைக்குரிய குற்றச் செயல்.

இதனால், உயிரிழப்பு நேரிட்டால் மின் வேலி அமைத்த நபா் மீது வழக்குத் தொடுக்கப்படும். உயிரிழப்புக்கு மின் வேலி அமைத்தவா்களே முழுப் பொறுப்பு ஏற்பதுடன், மின் இணைப்பும் துண்டிக்கப்படும். அபராதமும் விதிக்கப்படும். இதுபோன்ற மின் விபத்து தொடா்பாக மின்சார வாரியம் எந்தவித பொறுப்பும் ஏற்காது. இழப்பீடும் வழங்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT