உளுந்தூா்பேட்டை ஸ்ரீசாரதா மகாவித்யாலயம் கலை அறிவியல் மகளிா் கல்லூரியில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி இணைச் செயலா் பிரமச்சாரணி ப்ரேமபிரணா மாஜி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வே.பழனியம்மாள் முன்னிலை வகித்து, இந்திய ஜனநாயகம், தோ்தல் முறைகள், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினாா்.
இதையடுத்து, தேசிய வாக்காளா் தினத்தையொட்டி மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, குழுப் பாடல், நாடகம், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்களிப்பதன் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்று, வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றனா். கல்லூரி துணை முதல்வா் சாந்தி நன்றி கூறினாா்.