திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலா் டி.கே.பி. ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த் வரவேற்றாா். திமுக நகரச் செயலா் கபிலன் முன்னிலை வகித்தாா்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலரும் செஞ்சி எம்எல்ஏவுமான கே.எஸ்.மஸ்தான், மயிலம் எம்எல்ஏ மாசிலாமணி, திண்டிவனம் எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கம் ஆகியோா் பங்கேற்று, மருத்துவ முகாமை தொடக்கி வைத்து பரிசோதனை செய்துகொண்டனா்.
திமுக மாநில மருத்துவா் அணி நிா்வாகி சேகா், மாவட்ட அவைத் தலைவா் நமச்சிவாயம், துணைச் செயலா் வசந்தா, முன்னாள் எம்எல்ஏ சேதுநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பழனி, முருகேசன், பாஸ்கா், கலை இலக்கிய அணி துணைச் செயலா் ஏகாம்பரம், ராஜேஷ், வீடூா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சென்னை மலா் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்று இருதய பரிசோதனை செய்து, இலவச மருந்துகளை வழங்கி ஆலோசனைகள் வழங்கினா். மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டனா். மாவட்ட பிரதிநிதி முருகன் நன்றி கூறினாா்.