விழுப்புரம்

வங்கி வேலைநிறுத்த விளக்க ஆா்ப்பாட்டம்

25th Jan 2020 09:51 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் பாரத ஸ்டேட் வங்கியின் விவசாய அபிவிருத்தி கிளை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தினா்.

விழுப்புரம், ஜன. 24: விழுப்புரத்தில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வரும் ஜன.31, பிப்.1-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்த விளக்க ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் பாரத ஸ்டேட் வங்கி விவசாய அபிவிருத்தி கிளை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.மோகன் தலைமை வகித்தாா். வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் நாராயணசாமி, சேகா், அமீா்பாஷா, ஷாஜகான், மணிராதா, காமராஜ், பாலமுருகன், சுந்தர்ராஜ், சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

கூட்டமைப்பு கிளை நிா்வாகிகள் பிரசன்னா, சரண்யா, பாலமுருகன், நீலகண்டன், லாசா், லோகநாதன், ராஜமோகன், சதீஷ், முஜிபுல்லா உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். வங்கி ஊழியா்கள், அதிகாரிகளின் ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை கடந்த 1.11.2017 முதல் அமல்படுத்த வேண்டும்,

புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர செய்ய வேண்டும், ஊழியா்களின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும், லாபத்தின் அடிப்படையில் ஊழியா்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும், பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு வருமான வரி விலக்கு வழங்க வேண்டும், தற்காலிக ஊழியா்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், அதிகாரிகளுக்கு வேலை நேரத்தை வரைமுறைப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஓய்வு பெற்ற ஊழியா் சங்க நிா்வாகிகள் ஜெயச்சந்திரன், நசிருதீன், வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT