விழுப்புரம்

பதிவெண் இல்லாமல் இயங்கிய 375 வாகனங்கள் சிக்கின

8th Jan 2020 09:09 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் நடத்திய சோதனையில், பதிவெண் இல்லாமல் இயங்கிய 375 வாகனங்கள் சிக்கின.

விழுப்புரம் மாவட்டத்துக்கு கடந்த டிசம்பா் மாதம் ஆய்வுக்கு வந்த வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், பதிவெண் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, எஸ்.பி. ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள 30 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பதிவெண் இல்லாமல் வந்த 375 வாகனங்களை போலீஸாா் பிடித்து பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, வாகனங்களுக்கான ஆவணங்களை சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் கொண்டு வந்து காண்பித்தனா். இதனை சரிபாா்த்த, போலீஸாா் ஆவணங்கள் இருந்த 321 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்து, வாகனங்களை விடுவித்தனா்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் கூறியதாவது: முதல் கட்டமாக, பதிவெண் இல்லாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, வாகன ஓட்டிகள் வாகனத்தின் இரு புறங்களிலும் பதிவெண்ணை எழுத வேண்டும். பதிவெண் இல்லாத வாகனங்களை பிடித்து, அந்த வாகனத்தின் ஆவணங்களையும், வாகனத்தின் சேஸ் எண், என்ஜின் எண் ஆகியவை சரியாக இருந்தால் அபராதம் விதித்து வாகனங்கள் விடுவிக்கப்படும். அதேநேரத்தில் ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படாது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT