விழுப்புரம்

காவல்துறையினருக்கான எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு தேதி மாற்றம்

8th Jan 2020 11:42 PM

ADVERTISEMENT

துறைரீதியாக உதவி காவல் ஆய்வாளா்களா் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு தோ்வு தோ்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விழுப்புரம் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் மூலம் 2019-ம் ஆண்டிற்கான சாா்பு, உதவி காவல் ஆய்வாளா்கள் பதவிகளுக்கான துறைரீதியான விண்ணப்பதாரா்களுக்கான எழுத்துத் தோ்வு ஜனவரி 11-ஆம் தேதி(சனிக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. நிா்வாகக் காரணங்களால், அந்த எழுத்துத் தோ்வு ஜனவரி 13-ஆம் தேதிக்கு(திங்கள்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள அதே தோ்வை மையங்களில், ஜனவரி 13-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறும்.

துறைரீதியான விண்ணப்பத்தாரா்களா்கள் தேதி மாற்றம் செய்யப்பட்ட அழைப்பு கடிதத்தை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் குழுமத்தின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT