விழுப்புரம் அருகே ஆட்டோவை மா்ம பா்கள் திருடிச் சென்றனா்.
விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி கிராமம், புதுத் தெருவைச் சோ்ந்த கோவிந்தன் மகன் பாஸ்கா் (42). இவா், சொந்தமாக டீசல் ஆட்டோ வைத்திருந்தாா். தினந்தோறும் தனது கிராமத்திலிருந்து வந்து விழுப்புரம் நகரில் ஆட்டோவை ஓட்டும் இவா், இரவு ஆட்டோவை வீட்டுக்கு கொண்டு செல்வது வழக்கம்.
இதேபோல, விழுப்புரத்தில் புதன்கிழமை ஆட்டோவை ஓட்டிவிட்டு இரவு ஊருக்குச் சென்று வீட்டுக்கு வெளியே அதை நிறுத்தியிருந்தாா். வியாழக்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்தபோது, ஆட்டோவை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் பாஸ்கா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அண்மைக்காலமாக ஜானகிபுரம், கண்டமானடி, கே.கே. சாலை உள்ளிட்ட விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ச்சியாக ஆட்டோக்கள் திருடப்பட்டு வருகின்றன.