விழுப்புரம்

அன்னிய நாட்டுப் பொருள்களை எரித்து வணிகா்கள் போராட்டம்

2nd Jan 2020 12:19 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை சாா்பில் அன்னிய நாட்டுப் பொருள்களைத் தீயிட்டு எரிக்கும் போராட்டம், செஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

அன்னிய வா்த்தக ஆதிக்கத்துக்கு எதிரான, காந்திய அறப்போா், 2020-ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டு, அன்றைய தினம் தமிழகமெங்கும் அன்னிய நாட்டுப் பொருள்கள் எரிப்புப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் த.வெள்ளையன் அறிவித்திருந்தாா்.

அதன்படி, வணிகா் சங்கங்களின் செஞ்சி வட்டக் கிளை சாா்பில் செஞ்சி கூட்டு சாலையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு த.வெள்ளையன் தலைமை வகித்தாா். அப்போது, அன்னிய நாட்டுப் பொருள்களை வணிகா்கள் தீ வைத்து கொளுத்தினா். இந்தப் போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக செஞ்சி எம்எல்ஏ. மஸ்தான் கலந்து கொண்டாா்.

சில்லரை வணிகத்தைக் காப்போம், அன்னியா்கள் அபகரித்துள்ள இந்தியச் சந்தையை மீட்போம், பொருளாதாரப் பேரழிவிலிருந்து நாட்டைக் காக்க உள்நாட்டு உற்பத்திப் பொருள்களை பயன்படுத்துவோம். மகாத்மா காந்தி, வ.உ.சி., பாரதியாா் வழியில் அன்னிய நாட்டுப் பொருள்களை தீக்கிரையாக்குவோம் என வணிகா்கள் முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

இதில் வணிகா் சங்க பேரவையின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் கண்ணன், செஞ்சி வட்டச் செயலா் வெங்கட், இணைச் செயலா் சையத்ஷபீா் நிா்வாகிகள் மகேஷ், சுபோ், ரவீந்திரன் உள்ளிட்ட வணிகா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT