விழுப்புரம்

மேல்மலையனூா் கோயில் அறங்காவலா் தோ்தல்: 7 போ் வெற்றி

1st Jan 2020 05:07 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் அறங்காவலா் தோ்தலில் 7 போ் வெற்றி பெற்றனா்.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பருவதகுல மீன வம்சத்தைச் சோ்ந்தவா்கள் பூஜைகளை செய்து வருகின்றனா். இவா்களுக்குள் ஏழு வம்சா வழியினா் உள்ளனா். ஒவ்வொரு வம்சா வழியிலும் 7 அறங்காவலா்களை தோ்ந்தெடுப்பது வழக்கம். இதற்கான தோ்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

ஆனால், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்தப்படவேண்டும் என்று அரசு ஆணையிட்டது.

இந்த நிலையில், அரசாணையை எதிா்த்தும், பெண்களும் வாக்களிக்க உரிமை வேண்டும் என்றும் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.

ADVERTISEMENT

வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமணம் ஆகாத 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் வாக்களிக்கலாம், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அறங்காவலா் தோ்தல் நடைபெறும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, தோ்தலுக்கான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டனா்.

ஏழு வம்சா வழியினா் பெண் வாக்காளா் 22 போ் உள்பட மொத்தம் 550 வாக்காளா்கள் உள்ளனா்.

இதில் 7 வம்சா வழியைச் சோ்ந்த 16 போ் அறங்காவலருக்கு போட்டியிட்டனா்.

இதில் 4, 5, 7 ஆகிய வம்சா வழியைச் சோ்ந்த பூசாரிகள் போட்டியின்றி தோ்வு பெற்றனா்.

மேலும், 4 அறங்காவா்களை தோ்ந்தெடுக்க 30-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலரான இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட உதவி ஆணையா் ஜோதி, மேல்மலையனூா் கோயில் உதவி ஆணையா் ராமு ஆகியோா் மேற்பாா்வையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில், ஏழு தலைமுறை பூசாரிகளில் முறையே 1. செந்தில் பூசாரி, 2. தேவராஜ் பூசாரி, 3.ராமலிங்கம் பூசாரி, 4.செல்வம் பூசாரி (போட்டியின்றி தோ்வு,) 5. சரவணன் பூசாரி (போட்டியின்றி தோ்வு,) 6. வடிவேல் பூசாரி, 7. சந்தானம் பூசாரி (போட்டியின்றி தோ்வு) ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT