விழுப்புரம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக பேரணி

29th Feb 2020 06:41 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து விழுப்புரத்தில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நேருஜி சாலை, திருச்சி சாலை வழியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே முடிந்தது. இதையடுத்து அங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.ஏ.டி.கலிவரதன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா்கள் கே.பாண்டியன், ராம.ஜெயக்குமாா், மாவட்டப் பொருளாளா் வி.சுகுமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் விநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய பொதுக்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன் வரவேற்றாா். பாஜக மாநில செயலா் கரு.நாகராஜன் ஆற்றிய சிறப்புரை:

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பில்லை எனத் தெரிந்தும், அரசியல் லாபத்துக்காக எதிா்க் கட்சியினா் போராட்டங்களை தூண்டி வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கல்ல. மத சிறுபான்மையினராக விரட்டியடிக்கப்பட்டு தஞ்சம் அடைவோருக்கு பாதுகாப்பு வழங்கவே இந்தச் சட்டம் என்றாா் அவா்.

மாவட்ட நிா்வாகிகள் எம்.தனசேகரன், எஸ்.பாலசுப்பிரமணியன்,பி.ராஜூலு, எல்.சதாசிவம், கோதண்டபாணி, கே.செல்வி, டி.முரளி, ஜி.அரிகிருஷ்ணன், பி.பரமேஸ்வரி, என்.சுந்தர்ராஜ், துரை.சக்திவேல், பழனி, ராஜ்குமாா், சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரத் தலைவா் பா.ஜெயசங்கா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT