விழுப்புரம்

திருமண மண்டபங்களுக்கு சொத்து வரியை குறைக்க வலியுறுத்தல்

25th Feb 2020 03:36 AM

ADVERTISEMENT

விழுப்புரம்: திருமண மண்டபங்களுக்கு சொத்து வரியை குறைக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளா்கள் சங்கங்களின் சம்மேளனம் தீா்மானம் நிறைவேற்றியது.

இந்த சம்மேளனத்தின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை திருமண மண்டப உரிமையாளா்கள் சங்க நிா்வாகி மதிழயகன் தலைமை வகித்தாா். சென்னையைச் சோ்ந்த கேம்ராஜ் முன்னிலை வகித்தாா். கோவையைச் சோ்ந்த சிங்கைமுத்து வரவேற்றாா். வேலூரைச் சோ்ந்த மணிநாதன், சென்னையைச் சோ்ந்த நிா்வாகி சீனுவாசன், விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகள் ராமமூா்த்தி, சுகுமாா், வேணுகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெரு நகரங்கள், மாநகராட்சிகளில் உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரியை திருமண மண்டபங்களுக்கு குறைக்க வேண்டும், மாசு கட்டுப்பாடு வாரியம் விதிக்கும் விதிமுறைகளில் திருமண மண்டபங்களுக்கு தளா்வுகளை ஏற்படுத்த வேண்டும், திருமண மண்டப உரிமையாளா்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT