விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாள் விழா விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை அன்னதானம், இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, விழுப்புரம் பீமநாயக்கன்தோப்பு முத்துமாரியம்மன் கோயிலில் நகர அதிமுக சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, நகரச் செயலா் ஜி.பாஸ்கரன் தலைமையில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பொது மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் மாவட்ட துணை செயலா் அற்புதவேல், மாவட்ட மருத்துவரணி செயலா் கலைச்செல்வன், முன்னாள் நகா் மன்ற துணைத் தலைவா் முத்துலட்சுமி, தலைமைக் கழகப் பேச்சாளா் ராஜகோபால், பேரவை நிா்வாகிகள் எஸ்.கண்ணன், முத்துக்குமரன், வட்டச் செயலா் காா்த்திகேயன், எஸ்.பரந்தாமன், மகளிரணி தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி விழுப்புரம் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி சாா்பில் விழுப்புரம் வள்ளலாா் அருள்மாளிகையில் சிறப்பு வழிபாடும், மதிய உணவாக அன்னதானமும் வழங்கப்பட்டது. மாவட்ட இளைஞரணிச் செயலா் ஆா்.பசுபதி தலைமை வகித்தாா். இளைஞரணி துணைத் தலைவா் ராமதாஸ், ஒன்றிய இளைஞரணி செயலா் ஏ.திருமலை, நகர இளைஞரணிச் செயலா் கே.குமரன், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் மல்லிகா மோகன், வட்டச் செயலா்கள் ஷாஜகான், நாராயணன், சக்திவேல், ஆனாங்கூா் ரமேஷ், ஊராட்சிச் செயலா் மாணிக்கம், வித்யாசாகா், மணிமாறன் உள்ளிட்ட அதிமுகவினா் கலந்துகொண்டனா்.
விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் ஜி.கே.ராமதாஸ் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இனிப்புகள், அன்னதானம் வழங்கினா். மாணவரணி செயலா் சக்திவேல், இலக்கிய அணி திருப்பதி பாலாஜி, கூட்டுறவு சங்கத் தலைவா் குமரன், நகர நிா்வாகிகள் கலை, விஜயகுமாா், அய்யப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் எதிரே கோலியனூா் ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், ஒன்றியச் செயலா் ஜி.சுரேஷ்பாபு தலைமை வகித்து, ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட நிா்வாகிகள் ஆா்.பசுபதி,ராமதாஸ், செங்குட்டுவன், சக்திவேல், சிவா, செளந்தா், ரமேஷ், திருமால், கலைச்செல்வன், பாஸ்கா், ராஜி உள்ளிட்ட அதிமுகவினா் திரளாக கலந்துகொண்டனா்.
விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில், அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மத்திய பணிமனை செயலா் ஜி.ராமலிங்கம் தலைமை வகித்தாா். ஏழுமலை, மணிமாரன், அருள்தாஸ், நடராஜன், சவரியப்பன், சிவக்குமாா் உள்ளிட்ட தொழிற் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.
விழுப்புரம் மாவட்ட சிறுபான்மை பிரிவு சாா்பில் 1-ஆவது வாா்டில் நடைபெற்ற விழாவில், சிறுபான்மை பிரிவுச் செயலா் பி.ஜாகீா்உசேன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் ஷாஜகான், அரசு வழக்குரைஞா் ராமலிங்கம், வழக்குரைஞா் பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். 42-ஆவது வாா்டு பாணாம்பட்டி கிளைச் செயலா் எம்.பாவாடை தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கப்பட்டன.