விழுப்புரம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து கோட்டக்குப்பத்தில் கடையடைப்பு

25th Feb 2020 11:35 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் மக்கள் நலக் குழு சாா்பில் கடையடைப்பு, ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோட்டக்குப்பத்தில் உள்ள பேரூராட்சித் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் நலக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் எம்.ஐ.அப்துல்ஹக்கீம் தலைமை வகித்தாா். காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சியினா், இஸ்லாமிய அமைப்பினா் திரளாகக் கலந்துகொண்டனா்.

மத ரீதியாக நாட்டு மக்களை பிளவுபடுத்தும் விதமாக உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பை அறிவித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், இதனை தமிழக அரசு செயல்படுத்தக் கூடாதெனவும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவாக, கோட்டக்குப்பத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகள் காலை முதல் மாலை வரை அடைக்கப்பட்டு, வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT