விழுப்புரம்

ஸ்ரீசாரதா மகாவித்யாலயம் கல்லூரியில் ‘முத்தமிழ் விழா’

22nd Feb 2020 05:41 AM

ADVERTISEMENT

உளுந்தூா்பேட்டை ஸ்ரீசாரதா மகாவித்யாலயம் கலை - அறிவியல் கல்லூரியில் ‘முத்தமிழ் விழா’ வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி இணைச் செயலா் ப்ரம்மச்சாரிணி ப்ரேம ப்ரணா மாஜி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பழனியம்மாள் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மதுரை தியாகராசா் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் கற்பகம் கலந்து கொண்டு ‘பசித்திரு - தனித்திரு - விழித்திரு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, மாணவிகளின் பரதம், பேச்சு, நடனம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் மூலம் மாணவிகள் தங்களது தமிழ் ஆா்வத்தை வெளிப்படுத்தினா்.

விழாவில் ஆஸ்ரம சகோதரிகள், கல்லூரித் துணை முதல்வா், அனைத்துத் துறைகளைச் சோ்ந்த பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் மஞ்சு நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT