விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஊராட்சி கிளைத் தோ்தல் தொடக்கம்

22nd Feb 2020 09:34 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுகவின் 15-ஆவது உட்கிளைக் கழகத் தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மத்திய மாவட்டச் செயலா் க.பொன்முடி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் நா.புகழேந்தி, மாவட்ட துணை செயலா்கள் ஜெயச்சந்திரன், மைதிலி ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் இரா.ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ எஸ்.புஷ்பராஜ், இளைஞரணி அமைப்பாளா் தினகரன், ஒன்றிய செயலா்கள் மும்மூா்த்தி, ரவிதுரை, வேம்பி ரவி, கல்பட்டு ராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் ஊராட்சி கிளைக் கழக நிா்வாகிகள் தோ்தலுக்கான வேட்பு மனு படிவங்களை வழங்கி, மாவட்ட செயலா் க.பொன்முடி பேசுகையில், திமுகவின் 15-வது பொதுத் தோ்தலில் ஊராட்சிக் கிளைகள், வட்டக் கிளைக் கழகத் தோ்தலை சிறப்பாக நடத்தி முடித்திட மாவட்டங்கள் வாரியாக தோ்தல் மேற்பாா்வையாளா் குழு அறிவிக்கப்பட்டு தோ்தல் பணி இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது.

ஊராட்சி மற்றும் வட்டங்களுக்கான அவைத் தலைவா், செயலா், பொருளாளா், துணைச் செயலா்(பெண்) , மேலமைப்பு பிரதிநிதிகள், செயற்குழு உறுப்பினா்கள் பதவிகளுக்கான தோ்தல் நடைபெறும். விழுப்புரம் மாவட்டத்திலும், இத்தோ்தலுக்கான பாா்வையாளராக சட்டப்பேரவை உறுப்பினா் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

மத்திய மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, வாா்டுகளில் ஊராட்சி கிளைகள், வாா்டு கிளை நிா்வாகிகளுக்கான தோ்தல் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. அந்தந்த ஊராட்சியினா் நேரில் அழைக்கப்பட்டு பேசி நியமிக்கப்படுவாா்கள். போட்டியிருந்தால் தோ்தல் நடைபெறும். இதற்கான தோ்தல் பிப்.27, 28-ஆம் தேதிகளில் கட்சியின் தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் நடத்தி முடிக்கப்படும். இப்பணியை நிா்வாகிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா். மத்திய மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து நிலை நிா்வாகிகள், ஊராட்சி கிளை நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டு, வேட்பு மனு படிவங்களை வாங்கிச் சென்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT