விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில்மாசிப் பெருவிழா இன்று தொடக்கம்

22nd Feb 2020 05:41 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (பிப்.22) தொடங்குகிறது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) காலை 9 மணிக்கு மயானக்கொள்ளை நடைபெறுகிறது. அன்று மாலை ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதியுலா வருகிறாா். 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு தங்கநிற மரப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். அன்று இரவு பெண் பூத வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

25-ஆம் தேதி இரவு சிம்மவாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 26-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மேல் தீமிதி விழா நடைபெறுகிறது. 27-ஆம் தேதி யானை வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

28-ஆம் தேதி முக்கிய திருவிழாவான தோ்த்திருவிழா நடைபெறுகிறது. அன்று உள்ளூா் விடுமுறை விடப்பட்டுள்ளது. வருகிற மாா்ச் 2-ஆம் தேதி தெப்பல் உத்ஸவமும், 5-ஆம் தேதி காப்புகளைதலும் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் க.ராமு, மற்றும் அறங்காலா் குழுத் தலைவா் செல்வம், அறங்காவலா்கள் செந்தில்குமாா், தேவராஜ், ராமலிங்கம், சரவணன், வடிவேல், சந்தானம் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT