விழுப்புரம்

தேச ஒற்றுமையை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினா் நடைபயணம்

22nd Feb 2020 09:35 AM

ADVERTISEMENT

தேச ஒற்றுமையை காக்க வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினா் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபயணம் மேற்கொண்டனா்.

‘தேச ஒற்றுமை காப்போம்’ என்ற தலைப்பில் மத நல்லிணக்கம், மனித நேயம், ஊழல் இல்லாத இந்தியா ஆகியவற்றை வலியுறுத்தி, சென்னையிலிருந்து திருச்சி வரையில் ஆம் ஆத்மி கட்சியினா் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனா். மாநில ஒருங்கிணைப்பாளா் வசீகரன் தலைமையில் அந்தக் கட்சியினா், திண்டிவனம் வழியாக விழுப்புரத்துக்கு வியாழக்கிழமை வந்து தங்கினா்.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடைபயணத்தை தொடங்கினா். இதில், மாநில மகளிா் அணித் தலைவி ஸ்டெல்லா, விழுப்புரம் மாவட்டத் தலைவா் சுந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழுப்புரத்திலிருந்து அரசூா் வழியாக உளுந்தூா்பேட்டைக்கு வெள்ளிக்கிழமை சென்றடைந்தனா். தொடா்ந்து நடைபயணத்தை மேற்கொண்டு, வரும் 26-ஆம் தேதி திருச்சிக்கு சென்றடையவுள்ளதாக, அக்கட்சியினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT