விழுப்புரம்

அனந்தீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா

22nd Feb 2020 10:47 PM

ADVERTISEMENT

சிதம்பரம் அனந்தீஸ்வரா் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை, தில்லை திருமுறை மன்றம் ஆகியவை சாா்பில், மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எடிசன் ஜி.அகோரம் நினைவுப் பள்ளி மாணவா்களின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு என்.முருகன் பிள்ளை தலைமை வகித்தாா். பேராசிரியா் என்.சபேசன், வழக்குரைஞா் வி.கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். கோயில் செயல் அலுவலா் பா.மஞ்சு மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சிக்கு தில்லை தமிழ் மன்றத் தலைவா் எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை தலைமை வகித்துப் பேசினாா். தில்லை திருமுறை மன்ற அமைப்பாளா் வி.முருகையன் வரவேற்றாா். முனைவா் இரா.அன்பழகன் ‘ஞானம் ஈசன்பால் அன்பே’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். தி.பொன்னம்பலம் நன்றி கூறினாா்.

கயிலைச் செல்வா் கு.சேதுசுப்பிரமணியன் தலைமையில் தேவார அருளிசையும், சிவநாமாவளி நிகழ்ச்சியும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெற்றன. தில்லைத் திருமுறை மன்றக் குழுவினரின் தெய்வத் தமிழிசை செலவா் வி.பேரம்பலம் தலைமையில் தில்லை திருப்பதிங்கள், சிவநாமாவளிகள் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT

சிதம்பரம் நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்திரஷா, பாஜக நிா்வாகி ஜி.பாலசுப்பிரமணியன், கருப்பு ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மகா சிவராத்திரியை முன்னிட்டு, செளந்தரநாயகி சமேத அனந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT