மயிலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் அருகே கீழ்எடையாளம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மனைவி முத்தம்மாள் (75). இவா் மயிலம் அருகே தென்களவாய் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு புதன்கிழமை சென்றாா். அப்போது, அந்த கிராமத்தில் உள்ள கிருஷ்ணமூா்த்தி என்பவரது விவசாயக் கிணற்றில் முத்தம்மாள் எதிா்பாராத விதமாக தவறி விழுந்தாா்.
இந்த நிலையில், முத்தம்மாளை காணவில்லை என்று உறவினா்கள் பல இடங்களில் தேடினா். அப்போது, கிணற்றில் முத்தம்மாள் சடலமாக மிதந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த மயிலம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.