விழுப்புரம்

பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை ஏற்படுத்த வலியுறுத்தல்

15th Feb 2020 09:49 AM

ADVERTISEMENT

பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் சேகா், செல்லத்துரை, ராமலிங்கம், பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சம்பத் வரவேற்றாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜெயச்சந்திரராஜா கலந்து கொண்டு கோரிக்கையுரை ஆற்றினாா்.

தமிழ்நாடு சத்துணவுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் சீனுவாசன், தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலச் செயலா் சிவக்குமாா், மாநில பிரசாரச் செயலா் சுகமதி, மாநிலப் பொருளாளா் ஜெய்கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் பெருமாள் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்கு என்று தனியாக துறையை ஏற்படுத்தி மேம்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டப் பணியாளா்களுக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்களுக்கு வழக்குவதற்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டப் பணியாளா்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT