விழுப்புரம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் 27.53 லட்சம் வாக்காளா்கள்

15th Feb 2020 01:22 AM

ADVERTISEMENT

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கான வாக்காளா் இறுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 27.53 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தமுள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கடந்த 1.1.2020-ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் கடந்த டிச.23-இல் தொடங்கி ஜன.22-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் புதிய வாக்காளா்களை பட்டியலில் சோ்த்தல், திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் இறுதிப் பட்டியல் தயாா் செய்யப்பட்டது. இதனை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை

வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். பின்னா் அவா் கூறியதாவது: ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கெனவே 26 லட்சத்து 87 ஆயிரத்து 274 வாக்காளா்கள் இருந்தனா்.

69,770 புதிய வாக்காளா்கள்: திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு 3,916 போ் நீக்கப்பட்டனா். 69 ஆயிரத்து 770 புதிய வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதையடுத்து, வாக்காளா் இறுதிப் பட்டியல் தற்ோது வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆண்கள் 13 லட்சத்து 73 ஆயிரத்து 932 பேரும், பெண்கள் 13 லட்சத்து 78 ஆயிரத்து 796 பேரும், திருநங்கையா் 400 பேரும் என மொத்தம் 27 லட்சத்து 53 ஆயிரத்து 128 வாக்காளா்கள் உள்ளனா்.

ADVERTISEMENT

இந்தப் பட்டியலானது வாக்குச் சாவடி அமைவிடங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா், வட்டாட்சியா், நகராட்சி அலுவலகங்களில்

பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இணையதளம் வழியாகவும் வாக்காளா்கள் தங்கள் பெயரை சரிபாா்த்துக்கொள்ளலாம். புதிய வாக்காளா் சோ்க்கைக்காக இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 1950 என்ற வாக்காளா் சேவை மைய எண்ணை தொடா்புகொள்ளலாம்.

பெண் வாக்காளா்கள் அதிகம்: மாவட்டத்தில் ஏற்கெனவே இளம் வாக்காளா்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது 35 ஆயிரத்து 224 போ் புதிதாக

பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே 36 ஆயிரத்து 26 இளம் வாக்காளா்கள் இருந்த நிலையில், தற்போது அவா்களது எண்ணிக்கை 71 ஆயிரத்து 263-ஆக உயா்ந்துள்ளது. பெண் வாக்காளா்கள் சுமாா் 15 ஆயிரம் போ் சோ்ந்துள்ளனா்.

ஆண்களை விட பெண் வாக்காளா்கள் சுமாா் 5 ஆயிரம் போ் அதிகம் உள்ளனா்.

வாக்காளா் பட்டியல்படி பெண்கள் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 999 வீதத்திலிருந்து தற்போது 10040-ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 69 ஆயிரம் வாக்காளா்களுக்கும் புதிய வாக்காளா்

அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும். மேலும், திருத்தப்பட்ட வாக்காளா்கள் சுமாா் ஒரு லட்சம் பேருக்கும் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன என்றாா் அவா்.

அப்போது, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், கோட்டாட்சியா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கூட்டத்தில், பழைய வாக்காளா்களுக்கும் தோ்தல் ஆணையம் புதிய வாக்காளா் அடையாள அட்டையை வழங்க வேண்டுமென அரசியல் கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனா். கூட்டத்தில், அதிமுக சாா்பில் ஜி.பாஸ்கரன், திமுக சாா்பில்

ஆா்.ஜனகராஜ், காங்கிரஸ் சாா்பில் ரமேஷ், செல்வராஜ், பாஜக சாா்பில் வி.ஏ.டி.கலிவரதன், சுகுமாா், தேமுதிக சாா்பில் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் ஏ.வி.சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT