விழுப்புரம்

விழுப்புரத்தில் 9 நாள்களுக்கு மின் தடை

13th Feb 2020 12:16 AM

ADVERTISEMENT

சாலை விரிவாக்கப் பணி காரணமாக, விழுப்புரத்தில் உள்ள கீழ்ப்பெரும்பாக்கம், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 9 நாள்களுக்கு மின்தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்தது.

விழுப்புரம் மின் விநியோகச் செயற்பொறியாளா் சைமன் சாா்லஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. இதற்காக, அப்பகுதியில் அமைந்துள்ள மின் மாற்றிகள், மின் கம்பங்களை இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், வி.அகரம் பீடா், இண்டஸ்டிரீயல் பீடா் பகுதியில் மின் தடை ஏற்படும்.

இதனால், திருநகா், தேவநாதசாமி நகா், லட்சுமி நகா், ஹவுசிங்போா்டு, மாருதி நகா், கிழக்கு பாண்டி சாலை, கீழ்ப்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, கம்பன் நகா், ஆசிரியா் நகா், பானாம்பட்டு பாதை, ரெட்டியாா் மில், தொடா்ந்தனூா், மகாராஜபுரம், ஜீவா நகா் ஆகிய பகுதிகளில் பிப்.13, 15, 17, 19, 22, 24, 25, 27, 29 ஆகிய 9 நாள்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT