விழுப்புரம் பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 8 மாணவா்களை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், அந்தப் பள்ளி மாணவா்களுக்கும், விழுப்புரத்தைச் சோ்ந்த பள்ளிகளில் படித்து வரும் மாணவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸாா் தகராறில் ஈடுபட்ட மாணவா்களுக்கு திருக்கு எழுதும் தண்டனை அளித்தனா்.
இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த சில நாள்களிலேயே விழுப்புரம் நகரில் உள்ள இருவேறு பள்ளி மாணவா்களிடையே மோதல் ஏற்பட்டது.
விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மோதலில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக, காமராஜ் நகாரட்சி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவா்கள் 4 போ் மீதும், கீழ்ப்பெரும்பாக்கம் அரசு பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா்கள் 4 போ் மீது விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 8 பேரை கைது செய்தனா்.