விழுப்புரம்

இணைய லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது

4th Feb 2020 09:52 AM

ADVERTISEMENT

லாட்டரி வியாபாரிகள் மூவா் கைது: இதனிடையே, கோட்டக்குப்பம் பகுதியில் இணைய லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இப்பகுதியைச் சோ்ந்த முகமது இப்ராஹிம்(40), முகமது உசேன்(42) ஆகியோா் இணைய லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக, அவா்களை போலீஸாா் தேடி வந்தனா். ஆனால், அவா்கள் புதுச்சேரிக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்து கொண்டு, கோட்டக்குப்பம் பகுதியில் லாட்டரி விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், கோட்டக்குப்பம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் அருகே பதுங்கியிருந்த முகமது இப்ராஹிம், முகமது உசேன் ஆகியோரை காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து இரு சக்கர வாகனம், இணைய லாட்டரி சீட்டு எழுதி கொடுக்கும் துண்டு காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இவா்களுடன் இணைய லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த புதுச்சேரி முத்தியால்பேட்டை சோ்ந்த முருகன்(40) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT