விழுப்புரம்

விழுப்புரத்தில் ரௌடி வெட்டிக்கொலை

14th Dec 2020 07:44 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் ரௌடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் விஜய் என்கிற தொப்பை விஜி(36) ரௌடி. இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, நாட்டு வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
காவல் நிலையத்திலும் ரௌடி பட்டியலில் உள்ளவர். இந்நிலையில் ரௌடி விஜி அவரது சித்தப்பா தந்தை சிலம்பரசன்(32) என்பவருக்கும் ஏற்கனவே பெண் ஒருவர் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் விஜி தனது சித்தப்பா தந்தை சிலம்பரசன் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிவில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சிலம்பரசன் தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவருக்கு வயிறு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டது. 

ADVERTISEMENT

உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். இது தொடர்பாக சிலம்பரசனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரௌடி கொலை செய்யப்பட்ட பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரத்தில் ரௌடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Villupuram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT