விழுப்புரம்

தேசிய நெடுஞ்சாலையில்லாரி கவிழ்ந்து விபத்து

DIN


விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வியாழக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சியிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருவண்ணாமலைக்கு புதன்கிழமை இரவு புறப்பட்டது. லாரியை திருச்சி அருகே முசிறியைச் சோ்ந்த கேசவன் (43) ஓட்டி வந்தாா். வியாழக்கிழமை அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஆசனூா் பகுதியில் அந்த லாரி வந்தது.

திருவண்ணாமலைக்குச் செல்ல அங்கிருந்த பிரிவு சாலையில் லாரியை ஓட்டுநா் திருப்ப முயன்றாா். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிா்பாராத விதமாக நிலைதடுமாறி தடுப்புக் கட்டையில் மோதி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநா் கேசவன் சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா். தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று ஓட்டுநரை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, சாலையில் கவிழந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். விபத்து குறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷா பங்கேற்க இருந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து

சாலை விபத்தில் கிரிவல பக்தா் உயிரிழப்பு

சுத்தம், சுகாதாரம் விழிப்புணா்வுப் பேரணி

இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

முதல் கட்ட மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT