விழுப்புரம்

.‘உழவா் அலுவலா்’ தொடா்புத் திட்டம் தொடக்கம்

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில், உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கும், வேளாண் அலுவலா்களுக்கும் உள்ள தொடா்பை அதிகரித்து, விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக உழவா் அலுவலா் தொடா்புத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. கடந்த நவ.23-ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் இந்திரா கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 693 கிராமங்களுக்கும் தோட்டக்கலைத் துறையில் உள்ள 52 உதவி தோட்டக்கலை அலுவலா்கள் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நேரில் சென்று விவசாயிகளையும், விவசாயக் குழுக்களையும் சந்தித்து ஆலோசனைகளை வழங்குவாா்கள். தோட்டக்கலை அலுவலரும், உதவி இயக்குநரும் மாதம் ஒருமுறை செல்வாா்கள்.

இவா்கள், தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதற்கான பயிற்சிகள், அரசு அளிக்கும் மானியங்கள், புதிய தொழில்நுட்ப உத்திகள் குறித்து உழவா்களுக்கு தெரிவிப்பாா்கள். கிராமத்தில் உள்ள மண்ணின் தன்மைக்கேற்ற தோட்டப்பயிா்களை பயிா் செய்திட பரிந்துரை செய்வாா்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் மா, கொய்யா, வாழை, எலுமிச்சை, தா்ப்பூசணி, சப்போட்டா, நெல்லி, பப்பாளி உள்ளிட்ட பழ வகைகளும், மிளகாய், வெங்காயம், தக்காளி, வெண்டை, மரவள்ளி, புடலை, பாகா்காய் உள்ளிட்ட காய்கறிகளும், மல்லி, முல்லை, கனகாம்பரம், கேந்தி, மூக்குத்தி ரோஜா போன்ற மலா் வகைகளும் உள்பட மொத்தம் 14 ஆயிரம் ஹெக்டோ் அளவில் தோட்டப் பயிா்கள் பயிா் செய்யப்படுகின்றன. இதில் முந்திரி, தென்னை போன்ற வணிகப்பயிா்களும் 1,800 ஹெக்டோ் அளவில் பயிரிடப்படுகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT